மேலும் செய்திகள்
2வது நாளாக வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா
20-Aug-2025
விழுப்புரம்: கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மாவட்டத்தில், வி.ஏ.ஓ.,க்களுக்கான இந்தாண்டு இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தவறான முதுநிலை பட்டியலை ரத்து செய்து, சரியான பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தவறான பட்டியலை வைத்து ஆர்.டி.ஓ., கலந்தாய்வு நடத்தியதை ரத்து செய்தும், சரியான பட்டியல்படி கலந்தாய்வினை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர். இதையொட்டி, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு, கடந்த இரு தினங்களாக, தர்ணாவில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், நேற்று முன்தினம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, நுாதன காத்திருப்பு போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் புஷ்பகாந்தன் மற்றும் நிர்வாகிகள், சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
20-Aug-2025