உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வணிக வளாக பூட்டை உடைத்து போராட்டம் கோட்டக்குப்பத்தில் வி.சி., கட்சியினர் கைது

வணிக வளாக பூட்டை உடைத்து போராட்டம் கோட்டக்குப்பத்தில் வி.சி., கட்சியினர் கைது

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பத்தில் திறக்காமல் மூடிக்கிடக்கும், தாட்கோ திட்ட வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து போராட்டம் நடத்திய வி.சி., கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில், தாட்கோ திட்டத்தில், ஆதிதிராவிடர்களுக்காக கடந்த 1997ம் ஆண்டு வணிக வளாகம் கட்டப்பட்டது. 10 கடைகளை கொண்ட அந்த வளாகத்தில், காய்கறி, பழக்கடைகள் வைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 29 ஆண்டுகளை கடந்தும், இதுவரை வணிக வளாகம் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. அப்பகுதி மக்கள், பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில், வி.சி., கட்சியினர் வணிக வளாகத்தை திறக்கும் போராட்டம் அறிவித்து நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு, வி.சி., தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை தள்ளி விட்டு பூட்டப்பட்டுள்ள வணிக வளாக இரும்பு ஷட்டரின் பூட்டுகளை, உடைத்து, திறந்து உள்ளே சென்று கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன், போராட்டத்தில் ஈடுப்பட்ட வி.சி.,கட்சியை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ