உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டோல் பிளாசாவை சேதப்படுத்திய வி.சி., நிர்வாகி கைது

டோல் பிளாசாவை சேதப்படுத்திய வி.சி., நிர்வாகி கைது

விக்கிரவாண்டி: டோல் பிளாசா மீது தாக்குதல் நடத்திய வழக்கில் வி.சி., நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி, டோல் பிளாசாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் திலீபன் நேற்று முன்தினம் கடக்கும் போது ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது கார் டிரைவர் கார்மேகம் டோல் பிளாசா பணியில் இருந்த ஊழியர் தினேஷ் என்பவரை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கார் மேகத்தை தாக்கினார். இச்சம்பவம் தொடர்பாக வி.சி.,வினர் டோல் பிளாசா அலுவலகம் மற்றும் வசூல் மையத்தை கல்லால் அடித்து உடைத்தனர். டோல் பிளாசா முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ய முயன்ற போது கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து டோல் பிளாசா பி.ஆர். ஓ., தண்டபாணி விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் வழக்கு பதிந்து விசாரணை செய்து முதற்கட்டமாக ஆசூரை சேர்ந்த வி.சி., ஒன்றிய பொருளாளர் ஏழுமலை,33; என்பவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை