உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீசாரை கண்டித்து வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

போலீசாரை கண்டித்து வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

கண்டமங்கலம், : கண்டமங்கலம் போலீசாரை கண்டித்து வி.சி.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கண்டமங்கலம் அடுத்த அம்மணங்குப்பம் காலனியை சேர்ந்தவர் செல்வம் மனைவி பொம்பியம்மாள்,30; வி.சி., முகாம் துணை செயலாளர். இவரை, கடந்த 26ம் தேதி வயலில் மாடு மேய்த்த தகராறில் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல்,48; குமரவேல்,23; ஆகியோர் கத்தியால் வெட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்தனர். குமாரவேலை தேடிவருகின்றனர். இந்நிலையில், கத்தி வெட்டுப்பட்டு படுகாயமடைந்த பொம்மியம்மாள், அவரது கணவர் செல்வம் 34; உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிவு செய்த கண்டமங்கலம் போலீசாரை கண்டித்து வி.சி., கட்சியினர் நேற்று கண்டமங்கலம் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தமிழ்செழியன், தமிழ்குடி, விடுதலைக்கனல், மகளிரணி மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் நாகஜோதி முன்னிலை வகித்தனர். வானுார் தொகுதி செயலாளர் பால்வண்ணன் வரவேற்றார்.ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அஸ்கர் அலி உள்ளிட்டோர் போலீசை கண்டித்து பேசினர்.ஒன்றிய பொருளாளர் அம்பேத்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
பிப் 02, 2025 05:48

அடுத்தவன் வயலில் மாட்டை மேய்த்த பெண்ணுக்கு அது திருட்டு என்று சொல்லக்கூட முடியாத தலைவர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டமாம், விவியசாயிகளை வஞ்சிக்கும் விசிக இருந்தால் என்னாகும் என்று யோசியுங்க விவசாயிகளே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை