உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சென்னை - திருச்சி மார்க்கத்தில் வாகன போக்குவரத்து இயல்பு நிலை

சென்னை - திருச்சி மார்க்கத்தில் வாகன போக்குவரத்து இயல்பு நிலை

விழுப்புரம் : விழுப்புரத்தில் கனமழை வெள்ளத்தால் தடைபட்ட சென்னை - திருச்சி மார்க்க வாகன போக்குவரத்து, நேற்று அதிகாலை முதல் இயல்பு நிலைக்குத் திரும்பியது.சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலை மார்கத்தில், விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் மலட்டாற்று வெள்ள நீர் புகுந்ததால், நேற்று முன்தினம் காலை 9:00 மணி முதல் அந்த வழியில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.இதனால், உளுந்துார்பேட்டை, மடப்பட்டு பகுதியிலிருந்து, பண்ருட்டி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அரசூர் பகுதியில் வெள்ள நீர் வடிந்ததால், நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் ஒரு மார்க்க சாலையை சீரமைத்து, சென்னை - திருச்சி மார்க்க வாகனங்களை இயக்கினர். நேற்று அதிகாலை முதல் சென்னை - திருச்சி மார்க்கத்தில் இயல்பாக வாகனங்கள் இயக்கம் தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை