உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டம்

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த சித்தேரி கிராமத்தில் ஊராட்சி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஊராட்சி ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பற்றாளர் தண்டபாணி, மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

செஞ்சி

வல்லம் அடுத்த குறிஞ்சிப்பை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் சரஸ்வதி செல்வராஜ் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கஜலட்சுமி தீர்மானங்களை வாசித்தார். கிராம கணக்கு தணிக்கைக்கு வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும், ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத் தலைவர் கன்னியம்மாள் காசிநாதன், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

மயிலம்

வெங்கந்தூரில் நடந்த கிராம கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் மணிமாறன், விவசாய அணி பாஸ்கர், ஊராட்சி தலைவர் வசந்தா விநாயகம், துணைத் தலைவர் எழுமலை, ஊராட்சி செயலாளர் சிவக்குமார், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.மயிலத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை