உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு

பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு

விழுப்புரம் : பஸ் வசதிக்கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். செஞ்சி அடுத்த வவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு: எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 2000 பேர் வசிக்கின்றோம். எங்கள் பகுதிக்கு இதுவரை பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அணிலவாடி வரை பஸ்சில் வந்து, அங்கிருந்து எங்கள் கிராமத்திற்கு 2 கி.மீ., துாரம் நடந்து வருகிறோம். இதனால், முதியோர், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். எங்கள் கிராமம் வழியாக செஞ்சியில் இருந்து- மேல்கூடலுார் சென்ற 15 என்ற அரசு பஸ்சையும் நிறுத்தி விட்டனர். எனவே, 50 ஆண்டுகளாக பஸ் வசதியில்லாத எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி