வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல்
செஞ்சி : வெள்ள நிவாரணம் கேட்டு பென்னகர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வல்லம் அடுத்த பென்னகர் கிராம மக்கள் 200 பேர் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 8:30 மணியளவில் செஞ்சி - வந்தவாசி சாலையில் மறியல் செய்தனர்.தகவல் அறிந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் பேசி வெள்ள நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 9:20 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.