மண்டல கைப்பந்து போட்டி விழுப்புரம் கல்லுாரி முதலிடம்
வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் நடந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி உள் விளையாட்டரங்கில் நடந்த போட்டியில், மண்டலத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போட்டியில் விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு, வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வில்லியம், உடற்கல்வி இயக்குனர் அரங்க பண்பில்நாதன், அண்ணா அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா ஆகி யோர் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கினர்.