உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒரே இடத்தில் மாஜிக்களின் வழக்குகள் விழுப்புரம் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

ஒரே இடத்தில் மாஜிக்களின் வழக்குகள் விழுப்புரம் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் செம்மண் குவாரி வழக்கும், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சண்முகம் மீதான முதல்வரை அவதுாறாக பேசிய வழக்கும் நடந்து வருகிறது.இதனுடன் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையும் நடந்து வருகிறது.இந்த வழக்குகள் அடிக்கடி விசாரணைக்கு வருவதால், தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சண்முகம் மற்றும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் உள்ளிட்டோர் அவ்வப்போது ஆஜராகி வருகின்றனர்.நேற்று முன்னாள் அமைச்சர் பொன்முடியின் செம்மண் குவாரி வழக்கும், முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்கும், மாஜி சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் மீதான மேல்முறையீடு வழக்கும் விசாரணைக்கு வந்தது.காலை 10:30 மணிக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தனது கட்சி வழக்கறிஞர்களுடன் வந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அதே நேரத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.,யும் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்.இவர்கள், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் வெளியே, தங்களது வழக்கு விசாரணைக்காக காத்திருந்து பிறகு ஆஜர் ஆகினர். பிறகு வெளியே வந்தபோது, ராஜேஷ்தாஸ், சண்முகத்தை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் செம்மண் குவாரி வழக்கும் விசாரணைக்கு வந்தது. ஆனால், பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ஆகியோர் ஆஜராகவில்லை. வழக்கில் தொடர்புடைய பிறர் ஆஜராகினர்.மாஜி அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரி வழக்குகளுக்கு ஆஜரானதால், அவரது வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தி சேகரிக்க நிருபர்களும் திரண்டதால் கோர்ட்டில் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை