உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு

விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள், தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்ப போட்டி, அடுத்த மாதம் உஜ்ஜைனியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான தகுதி தேர்வு, கள்ளக்குறிச்சி விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. அதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்வாகினர். இதில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் கேலோ இந்தியா மல்லர் கம்ப பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மல்லர் கம்ப பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன், தமிழக மல்லர் கம்ப பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். தமிழக அணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 பேர் வீதம் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை