உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை கொலை செய்து எரித்து நாடகமாடிய கணவருக்கு ஆயுள் விழுப்புரம் மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

மனைவியை கொலை செய்து எரித்து நாடகமாடிய கணவருக்கு ஆயுள் விழுப்புரம் மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம்: மனைவியை கொலை செய்து எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகிளா கோர்ட் தீர்ப்பு அளித்தது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எம்.புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு, 75; இவரது மனைவி ஞானாம்பாள், 65; கடந்த 2022 ஜூலை 6ம் தேதி இரவு வீட்டில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.வயிற்று வலியால், தீகுளித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் ஆனந்தன் மரக்காணம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ஞானாம்பாள் பெயரில் இருந்த 1.5 ஏக்கர் நிலத்தை, செல்லக்கண்ணு தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு மறுத்த ஞானாம்பாளை, செல்லக்கண்ணு கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, உடலில் மண்ணெண்ணை ஊற்றி எரித்துள்ளார்.பின்னர், வயிற்று வலியால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக செல்லக்கண்ணு நாடகமாடி தனது மகனை நம்ப வைத்தது தெரியவந்தது.அதன்பேரில், செல்லக்கண்ணுவை கைது செய்த போலீசார், அவர் மீது விழுப்புரம் மகிளா கோர்ட்டில் கொலை வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், செல்லக்கண்ணுவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை