உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விளையாட்டில் சாதனை படைக்கும் விழுப்புரம் நகராட்சி பள்ளி மாணவர்கள்

 விளையாட்டில் சாதனை படைக்கும் விழுப்புரம் நகராட்சி பள்ளி மாணவர்கள்

விழுப்புரம்: விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், இந்தாண்டில் 16 மாணவர்கள் தேசிய மற்றும் மாநில போட்டியில் வென்றதோடு, மாவட்ட அளவில் 41 தங்கம், 35 வெள்ளி, 15 வெண்கல பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலிருந்து, இந்தாண்டு நடந்த குறுமைய போட்டிகள், வருவாய் மாவட்ட போட்டிகள், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணன், ஆசிரியர்கள் பசுபதி, தேவராஜ், ரமேஷ்பாபு, உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாதனை விபரம்: தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 2025--26ம் கல்வியாண்டிற்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்திய வில்வித்தை போட்டியில் இப்பள்ளி மாணவன் ரோகித், தமிழக அணிக்காக பங்கேற்றார். இதே போல், மாவட்ட தடகள போட்டியில், இப்பள்ளி மாணவர்கள் ஏழுமலை, மகாகணபதி, சரத்குமார், ரூபன், கோகுல்ராஜ், அனந்தராமன், சஞ்சய் ஆகாஷ், தயாநிதி, மார்க்பினோலின், கிருஷ்ணா ஆகியோர் வெற்றி பெற்று பரிசு கோப்பை வென்றனர். மாவட்ட நீச்சல் போட்டியில் மாணவர்கள் ரூபன், தவசி, தேவா, நிர்மல், ஆகியோர் வெற்றிபெற்றனர். மாவட்ட கேரம் போட்டியில் முகமதுஉக்காஸ், முகமது இக்ரமுல்லா, கிலீஷ்குமார் ஆகியோர் வெற்றிபெற்றனர். மாவட்ட சிலம்பம் போட்டியில் அபினேஷ், நித்திஷ், செந்தில் ஆகியோர் வெற்றிபெற்றனர். மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் நிர்மல் குமார் வெற்றி பெற்றார். மாவட்ட அளவில் நடந்த முதலமைச்சர் கோப்பையில் தடகள போட்டியில் ஏழுமலை, மகாகணபதியும், கால்பந்து போட்டியில் முகமதுஅஸ்வத், கெவின், சார்லஸ்செழியன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாவட்ட இளையோர் தடகள போட்டியில் ஏழுமலை, மகாகணபதி, கோகுல்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டியில், இப்பள்ளி மாணவன் கிருஷ்ணா முதலிடம் பெற்றார். குறுமையை அளவிலான கபடி போட்டியில் இப்பள்ளி முதலிடம் பெற்றது. இக்கல்வியாண்டில் 16 மாணவர்கள் தேசிய மற்றும் மாநில போட்டியில் பங்கேற்று கோப்பை வென்றுள்ளனர். மாவட்ட அளவில் 41 தங்கம், 35 வெள்ளி, 15 வெண்கலம், உள்ளிட்ட பதக்கங்கள் வென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்