உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிய அளவிலான கராத்தே போட்டி விழுப்புரம் வீரர்களுக்கு தங்கம்

ஆசிய அளவிலான கராத்தே போட்டி விழுப்புரம் வீரர்களுக்கு தங்கம்

விழுப்புரம்: நேபாளத்தில் நடந்த ஆசிய அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாணவர்கள் 5 பேர் தங்க பதக்கம் வென்றனர்.நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில், கடந்த வாரம் ஆசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களிலிருந்து கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து, விழுப்புரம் மாவட்ட எய்ம்ஸ் கராத்தே யோகா பயிற்சி மைய மாணவர்கள், விழுப்புரம் தலைமை பயிற்சியாளர் ஏசியன் கோல்டு மெடலிஸ்ட் ரகுராமன் தலைமையில், கராத்தே வீரர், வீராங்கனைகள் 6 பேர் கலந்துகொண்டு, 5 பிரிவுகளில் முதலிடம் பெற்றனர்.பெண்கள் பிரிவில் 2 தங்க பதக்கமும், ஒரு வெள்ளி பதக்கமும், ஆண்கள் பிரிவில் தலா 3 தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர்களை, விழுப்புரம் மாவட்ட கராத்தே அசோசியேஷன் அமைப்பினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை