மேலும் செய்திகள்
டேக்வாண்டோ லீக் போட்டி
20-Aug-2025
ஆசிய கோப்பை வென்ற India
08-Sep-2025
விழுப்புரம்: ஆசிய அளவிலான டேக்வோண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஐதராபாத், கச்சிபவுலி விளையாட்டு அரங்கத்தில், கடந்த, 13 மற்றும், 14ம் தேதி ஆகிய இரு தினங்கள் நடந்தது. இந்த போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் பாலகணேசன் மற்றும் ஜெகதீஸ்வரன் தலைமையில் விழுப்புரத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் பூஜாஸ்ரீ, ஜனா, சர்வேஷ்வர், ஆலன் ஷாரன், சுஜித், தான்யா, ஜோதம் ஜோஸ்வா, அக்ஷய் ஸ்டான்லி ஆகிய 8 பேர் தங்கம்; ஜெஸ்வின், கீரண்குமார், கீர்த்திவாசன்,கோகுல சித்தார்த் ஆகிய, 4 பேர் வெள்ளி; தனுஜ், கவுசல்யா, எலிசா உள்ளிட்ட 3 பேர் வெண்கலம் வென்றனர்.
20-Aug-2025
08-Sep-2025