உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாவட்ட ஜூடோ போட்டியில் விழுப்புரம் மாணவர் சாதனை

 மாவட்ட ஜூடோ போட்டியில் விழுப்புரம் மாணவர் சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஜூடோ போட்டியில், 8 ம் வகுப்பு மாணவர் முதலிடம் பிடித்தார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, விழுப்புரம் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில், விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியைச் சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவர் முகுந்தன், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் முகுந்தனுக்கு, வி.ஆர்.பி. பள்ளி தாளாளர் சோழன் சால்வை அணிவித்து பாராட்டினார். முன்னாள் கவுன்சிலர் அன்பு, தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்