உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விபத்து வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்ட்

 விபத்து வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்ட்

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் விபத்து வாகனங்களை பாதுகா ப்பாக நிறுத்தும் ் இடமாக மாறியதால் பஸ்களை நிறுத்த டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட்டில் கடந்த பல மாதங்களாக விபத்துகளில் சிக்கும் வாகனங்களை போலீசார் பாதுகாப்பாடு நிறுத்தி வைத்துள்ளனர். இங்கு, நான்கு சக்கர வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் அதிகளவில் வரிசை கட்டி கொண்டு நிற்பதால், டவுன் பஸ்களை நிறுத்த டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது பற்றி போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் டிரைவர்கள் புகார் தெரிவித்தும் பலனில்லை. விபத்து வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்பதால் அந்த பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களை சிரமப்பட்டு திருப்பி செல்வதோடு, அங்கு பயணிகள் நிற்பதால் அச்சத்தோடும் இயக்கி செல்லும் நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்ட் என்பது பணிகள் வசதிக்கா அமைக்கபப்பட்டுள்ள இடமாகும். . இதற்கு நேர்மாறாக தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட்டில் விபத்து சிக்கும் வாகனங்கள் நிறுத்தும் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. போலீசார் இந்த வாகனங்களை பயணிகளின் பாதுகாப்பு மற்றும் டிரைவர்களின் சிரமத்தை கருதி அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ