உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க.,வேட்பாளர்திருக்கோவிலூரில் மாற்றம்

அ.தி.மு.க.,வேட்பாளர்திருக்கோவிலூரில் மாற்றம்

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி மனைவி கவிதா, நகர செயலாளர் இளவரசன் மனைவி சகாயராணி, முன்னாள் நகர செயலா ளர் சுப்பு மனைவி கவிதா கட்சியில் மனு செய்திருந்தனர். இவர்களில் இளவரசன் மனைவி சகாயராணியை வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்தது. இதில் அதிருப்தியடைந்த அ.தி.மு. க.,வினர் கட்சி தலைமையிடம் முறையிட்டனர். இதனையடுத்து நேற்று ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தியின் மனைவி கவிதாவை அ.தி.மு.க., தலைமை அதிகார பூர்வ வேட்பாளராக மாற்றி அறிவித்தது.இதனால் உற்சாகமடைந்த கட்சியினர் நேற்று காலை திருக்கோவிலூரில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை