உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தொழில் பயிற்சி 

மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தொழில் பயிற்சி 

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட பார்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நாற்காலி ஒயர் பின்னல் கைத்தொழில் பயிற்சி முகாம் நடந்தது.விழுப்புரத்தில் உள்ள சக்ஷம் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதியில் இருந்து கடந்த 22ம் தேதி வரை முகாம் நடந்தது. இதன் நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட சக்ஷம் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, கடந்த ஓராண்டாக சக்ஷம் அலுவலகத்தில் நடந்த கணினி, மொபைல், வயர் நாற்காலி பின்னல் பயிற்சி அளித்தார்.மாவட்ட இணைச் செயலாளர் பொற்செல்வி வரவேற்றார். துணை இயக்குனர் சுதாகர் சிறப்புரையாற்றி, பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.பயிற்சியில் 9 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். வழக்கறிஞர் ரவிக்குமார், மாநில தலைவர் சபாஷ்ராஜ், சக்ஷம் தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி