உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தன்னார்வலர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

தன்னார்வலர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் வட்ட அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும், சட்ட விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யவும், சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கைகளில் பங்குகொள்ளவும், தன்னார்வ தொண்டர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதிகள், விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை viluppuram.dcourts.gov.inஎன்ற, விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி