| ADDED : டிச 29, 2025 06:04 AM
செஞ்சி: செஞ்சி தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை அ.தி.மு.க., தொகுதி செயலாளர் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் 27, 28 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீங்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. செஞ்சி நகரத்தில் நடந்த முகாம்களை அ.தி.மு.க., தொகுதி செயலாளர் வழக்கறிஞர் வேலவன் ஆய்வு செய்தார். ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்ட 18 வயது நிரம்பியவர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க படிவங்களை வழங்கினார். ஆய்வின் போது நகர செயலாளர் சுந்தர்ராஜன், நிர்வாகிகள் வழக்கறிஞர் அரிநாத், குமரன், தமிழ், தினேஷ், மணிமாறன், சுகுமார் உடன் இருந்தனர். விழுப்புரம் கோலியனுார் தெற்கு ஒன்றியம், கண்டமானடி கிராமத்தில் நடந்த புதிய வாக்காளர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாமை, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை அவர் ஆய்வு செய்ததை தொடர்ந்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கினார். நிர்வாகிகள் ராஜ், கதிர்வேல், மலர், அகன், ரங்காராவ், பார்த்திபன் உடனிருந்தனர்.