உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கூட்டம்: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எதிர்ப்பால் திண்டிவனத்தில் பரபரப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கூட்டம்: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எதிர்ப்பால் திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம்: திண்டிவனம் தொகுதி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக நடந்த கூட்டத்தை கட்சி சார்பில் தனித்தனியாக நடத்துவதற்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரி வித்தால் பரபரப்பு நிலவியது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், அனைத்து கட்சி பிரதிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி திண்டிவனம் தொகுதிக்கான அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மரக்காணத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு நடந் தது. கூட்டத்திற்கு, திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தி.மு.க., சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், தயாளன், பழனி, ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்னர். அ.தி.மு.க., சார்பில் அர்ஜூனன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் தீனதாயளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், பன்னீர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டம் நடந்த திருமண மண்டபம் சிறிய அளவில் இருந்ததால், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு, அதன்படி தனித்தனியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் எதிர்ப்பு தெரிவித்து, தனித்தனியாக நடத்தக்கூடாது, ஒரே சமயத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,நிர்வாகிகள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் பின்நடந்த ஆலோசனைக்கு பின், இரு கட்சிகளும் ஒன்றாக பங்கேற்ற கூட்டத்தில் இரு கட்சியினரும் கருத்துகளை தெரிவித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை