உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் 11 வார்டுகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம் மேற்கு நகர பகுதியில், சாலாமேடு, ஆசாகுளம், கலைஞர் நகர், சிங்ப்பூர் நகர், தந்தை பெரியார் நகர், மஞ்சு நகர், வழுதரெட்டி உள்ளிட்ட 11 வார்டு பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான படிவம் வழங்கும் பணிகளை, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்பணிகளை மேற்கொண்டு வரும் கட்சி பாக முகவர்களுடன் (பி.எல்.ஏ-2) ஆய்வு கூட்டம் நடத்தி, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலகுழு இணை செயலாளர் புஷ்பராஜ், விழுப்புரம் மேற்கு நகர செயலாளர் சக்கரை, நகர துணைச் செயலாளர் புருஷோத்தமன், வார்டு செயலாளர்கள் தங்கம், சுந்தர், ராமலிங்கம், சிவக்குமார், விஜயசேதுபதி, நவநீதம், தாமரை மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்