உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வானுார்: வானுார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் முழுதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணிகள் நடந்து வருகிறது. வானுார் தொகுதிக்குட்பட்ட பூத்துறை, பெரம்பை, மொரட்டாண்டி, திருச்சிற்றம்பலம் ஊராட்களில் நடந்த முகாமை சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். மேலும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வானுார் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சதீஷ்குமார், அணி செயலாளர்கள் குணசேகரன், கார்த்திகேயன், பாசறை செயலாளர் சுமன், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ஜெய்பீம், நிர்வாகிகள் மோகன், தேவா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை