உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 7.88 லட்சம் பேருக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம்

7.88 லட்சம் பேருக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 7 லட்சத்து 88 ஆயிரத்து 654 வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் மேற்பார்வையிட்டு வருகிறார். அதன்படி, செஞ்சி தொகுதியில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 591 பேருக்கும், மயிலம் தொகுதியில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 357 பேருக்கும், திண்டிவனம் தொகுதியில் 93 ஆயிரத்து 461 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. வானுார் தொகுதியில் 99 ஆயிரத்து 705, விழுப்புரம் தொகுதியில் ஒரு லட்சத்து 193, விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்து ஆயிரத்து 107, திருக்கோவிலுார் தொகுதியில் 99 ஆயிரத்து 240 பேருக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம், நேற்று வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் ஆயிரத்து 970 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், இதுவரை 45.65 சதவீத வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. மயிலம் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 64 சதவீத படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், மீதமுள்ள 9 லட்சத்து 38 ஆயிரத்து 836 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்பு படிவங்களும், அடுத்த ஒரு வாரத்தில் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !