வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் அறிமுக வகுப்பு
விழுப்புரம்; அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில், 31வது ஆண்டு மாணவர்களின் அறிமுக வகுப்பு மற்றும் தொடக்க விழா நடந்தது. முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கி, மாணவர்கள் மிக விருப்பத்தோடு பயின்று மேன்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என பேசினார். தாளாளர் சரவணன், வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் இதுபோல் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பயின்று வரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருவதாக பேசினார். துணை முதல்வர் ஜோசப் இக்னேஷியஸ் உட்பட துறை தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர். புல முதன்மையர் பெருமாள் நன்றி கூறினார்.