உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு திருமண சீர் வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு குமார் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனர். மதியம் 12:30 மணிக்கு நர்த்தன மண்டபத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் சொற்பொழிவாற்றினார். இதில் வாலாஜா பேட்டை பல்லவா கல்வி குழும தாளாளர் பாண்டுரங்கன், செஞ்சி தமிழ்ச்சங்க தலைவர் கவிதாஸ், விழா குழுவினர், பாகதவர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி