மேலும் செய்திகள்
63 நாயன்மார் ஊர்வலம்; சிவனடியார்கள் பங்கேற்பு
15-Sep-2025
செஞ்சி : செஞ்சி வழியாக திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பாத யாத்திரை சென்ற சிவனடியார்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திண்டிவனம் - திருவண்ணாமலை பாத யாத்திரை சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் 19வது ஆண்டாக, கடந்த, 22ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு திண்டிவனம் மரகதாம்பிகை திந்திரிணீஸ்வரர் கோவிலில் இருந்து 270 பேர் திருவண்ணாமலைக்கு நடை பயணம் துவக்கினர். தொடர்ந்து காலை 11:00 மணியளவில் செஞ்சி வந்த நடைபயண குழு நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, துரை, மூர்த்தி, பாலாஜி, மணி, கார்த்திக் ஆகியோருக்கு பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம், பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் தங்க ராமு மற்றும் இந்து அமைப்பினர் சால்வை அணிவித்து சிவனடியார்களை வரவேற்றனர். தொடர்ந்து, சிறப்பு வழிபாடு நடத்தி மதிய உணவு வழங்கினர்.
15-Sep-2025