உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம், செஞ்சியில் துணை முதல்வருக்கு வரவேற்பு

திண்டிவனம், செஞ்சியில் துணை முதல்வருக்கு வரவேற்பு

திண்டிவனம்: திருவண்ணாமலைக்குச் சென்ற துணை முதல்வர் உதயநிதிக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.திண்டிவனம் இருதயபுரத்தில் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், தயாளன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பழனி, ராஜாராம், மணிமாறன், கவுன்சிலர்கள் நந்தகுமார், பிர்லாசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

செஞ்சி

செஞ்சி வழியாக திருவண்ணாமலை சென்ற துணை முதல்வர் உதயநிதிக்கு செஞ்சி கூட்ரோட்டில் பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தலைமையில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களும், அங்கிருந்து அரை கி.மீ., துாரத்தில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் இளைஞரணி நிர்வாகிளும், அவரது ஆதரவாளர்களும் வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ