மேலும் செய்திகள்
மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
03-Dec-2024
விழுப்புரம் : விழுப்புரத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அடுத்த குப்பம் கிராமத்தில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி ஹெல்ப்ஸ் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், உடலியக்க குறைபாடுகள், செவித்திறன், மூளைமுடக்கு வாதம், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, வீடு தேடிச்சென்று சங்க தலைவர் சவுந்தரராஜன் நலத்திட்ட உதவி வழங்கினார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், கோதண்டபாணி, மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
03-Dec-2024