மேலும் செய்திகள்
முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி நினைவு நாள்
07-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கப்பூரில் லட்சுமணன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் பிறந்த நாளையொட்டி, கோலியனூர் ஒன்றியம் கப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மின்விசிறி, ஐயன் பாக்ஸ், குக்கர், வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட கவுன்சிலர்கள் ஹரிராமன், கேசவன், முன்னாள் சேர்மன் குப்புசாமி முன்னிலை வகித்தனர்.தி.மு.க., நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கண்ணப்பன், ஆறுமுகம், ஜெயா பன்னீர்செல்வம், காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஞானவேல், துணை சேர்மன் உதயகுமார், ஊராட்சி தலைவர்கள் ராஜா, பாலமுருகன், ரமேஷ், பிரசன்னா, தனசேகர், முன்னாள் தலைவர்கள் கோவிந்தசாமி, கலியபெருமாள், தொழிலாளரணி ராஜா, கிளை செயலாளர்கள் அறிவழகன், முத்து, பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
07-Apr-2025