நலத்திட்ட உதவி வழங்கல்
திண்டிவனம்: ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒலக்கூர் ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ., சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நுாறு பயனாளிகளுக்கு தலா 3.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 கோடியே 55 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு 2 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், பி.டிஓ., அலுவலக மேலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.