உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் அடித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

கணவர் அடித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

விழுப்புரம்; கணவர் அடித்ததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டை சேர்ந்தவர் ரகோத்தமன், 40; விவசாயி. இவரது மனைவி சரண்யா, 32; இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரகோத்தமன் தினமும் குடித்துவிட்டு வந்து சரண்யாவை சந்தேகப்பட்டு அடித்துள்ளார். கடந்த, 28ம்தேதி ரகோத்தமன் அடித்ததால் மனமுடைந்த சரண்யா தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காணை போலீசார் ரகோத்தமன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !