மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
விழுப்புரம்: மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மருதுார்மேடு பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் ஆறுமுகம், 32; இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது மனைவி ராஜகுமாரி கண்டித்துள்ளார். இதே போல், நேற்று முன்தினம் அவர் மது அருந்திவிட்டு வந்ததை, அவரது மனைவி கண்டித்துவிட்டு, வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில், ஆறுமுகம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.