ஏரிக்கரை சாலை அமைக்கப்படுமா ?
அவலுார்பேட்டை: நொச்சலுார்- தாதங்குப்பம் ஏரிக்கரை சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், புதிய சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மேல்மலையனுார் அடுத்த நொச்சலுார் கிராமத்திலிருந்து தாதங்குப்பம் செல்வதற்கு ஏரிக்கரை பகுதியில் சாலை வழி உள்ளது. இப்பகுதியில் சாலை அமைக்காத நிலையில் தற்போது பொழிந்த கன மழையினால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இந்த வழி தாதங்குப்பம், மாந்தோப்பு, புதுார், அனிமாமேடு உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு 3 கி.மீ., துாரம் வரை செல்கிறது. இந்த பகுதி மக்கள் மழைக்காலங்களில் ஏரிக்கரை பகுதியில் நடந்தும், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சகதி நிறைந்த வழியில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கிராம மக்கள் நலன் கருதி இப்பகுதியில் சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.