மேலும் செய்திகள்
மணல் கடத்திய 4 பேர் கைது
09-Oct-2024
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே மர்மமான முறையில் தீயில் கருகிய பெண், மருத்துவமனையில் இறந்தார்.கண்டமங்கலம் அடுத்த நல்லப்பரெட்டிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரமணி, 40; மகன்கள் கருணாமூர்த்தி, 23; தட்சணாமூர்த்தி, 20; உள்ளனர்.பாண்டியன் மற்றும் ரமணிக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டார்.திருமணமான கருணாமூர்த்தி, மதுராந்தகத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இளையமகன் தட்சணாமூர்த்தி வெளியூரில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். வீட்டில் ரமணி மற்றும் கருணாமூர்த்தி மனைவி சுவேதா, 23; ஆகிய இருவர் மட்டும் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு 10:00 மணியளவில், வீட்டில் ரமணி மர்மமான முறையில் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் 31ம் தேதி காலை இறந்தார்.இது குறித்து தட்சணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
09-Oct-2024