உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு மனைவி ராஜேஸ்வரி, 42; கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி கடந்த 1ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடன், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று முன்தினம் காலை இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி