உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொண்டையில் உணவு  சிக்கி பெண் உயிரிழப்பு

தொண்டையில் உணவு  சிக்கி பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம்:கோட்டக்குப்பம் அருகே தொண்டையில் உணவு சிக்கியதில் மூச்சி திணறல் ஏற்பட்டு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கோட்டக்குப்பம் நடுக்குப்பம் ரோடு அம்பேத்கர் தெருவை சேர்ந்த பாபு. சென்னையில் செக்யூரிட்டி வேலை செய்கிறார். இவரது மனைவி சுசிலா, 56; இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு சுசிலா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது உணவு விழுங்கும் போது, தொண்டையில் உணவு சிக்கியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு, சுசிலா தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சுசிலா வரும் வழியிலே இறந்து விட்டாதாக தெரிவித்தனர். பாபு அளித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை