மேலும் செய்திகள்
பச்சை வாழியம்மன் கோவிலில் பூர்த்தி விழா
12-Sep-2025
விழுப்புரம்,: பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். செஞ்சி அருகே ஈச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி பச்சையம்மாள்,48; இவர், நேற்று முன்தினம் தனது மகன் இருசன், 22; என்பவரோடு, பைக்கில் அமர்ந்து சென்றார். சேத்பட்டு தேசிய நெடுஞ்சாலை, மேல்களவாய் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Sep-2025