உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் காயமடைந்த பெண் பலி 

விபத்தில் காயமடைந்த பெண் பலி 

வானுார்: புதுச்சேரி அருகே விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி, சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ைஷலஜா, 40; இவர் லாஸ்பேட்டை டிரைவிங் பள்ளியில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி தனது ஸ்கூட்டரில் புதுச்சேரி-திண்டிவனம் சாலை வழியாக உறவினரின் வீட்டிற்கு சென்றார். மொரட்டாண்டி சந்திப்பில் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, செந்தில்குமார் புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை