பெண்ணிடம் செயின் பறிப்பு திண்டிவனம் அருகே துணிகரம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டின் முன் நின்றிருந்த பெண்ணிடம் 4 சவரன் செயினை பறித்து சென்ற ெஹல்மெட் ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.திண்டிவனம் அடுத்த கொள்ளார் ஊராட்சி தலைவர் புண்ணியமூர்த்தி. இவரது தம்பி தட்சிணாமூர்த்தி மனைவி ஸ்ரீபிரியா,41; நேற்று முன்தினம் மாலை 6.45 மணிக்கு அதே கிராமத்தில், உறவினர் வீட்டின் முன் நின்றிருந்தார்.அப்போது, ெஹல்மெட் அணிந்து பைக்கில் வந்த இரு வாலிபர்கள், ஸ்ரீபிரியா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.இதேகிராமத்தில் சில மாதங்களுக்கு முன் ஸ்கூட்டியில் சென்ற பெண் அணிந்திருந்த 5 சவரன் செயினை, ெஹல்மெட் ஆசாமிகள் பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.இவ்விரு சம்பவங்களால், கொள்ளார் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.