உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

விழுப்புரம்: காணை அருகே 4 வயது குழந்தையுடன் மாயமான பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த சிறுவாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத், 30; இவரது மனைவி நித்யா, 23; கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக நித்யா தனது குழந்தையுடன் அதே ஊரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி குழந்தையுடன் வெளியே சென்ற நித்யா, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி