உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பெண்ணை தாக்கியவர் கைது

 பெண்ணை தாக்கியவர் கைது

அவலுார்பேட்டை: வளத்தியில் பெண்ணைத் தாக்கிய வழக்கில் 5 பேர் மீது வழக்குப் பதிந்து ஒருவரை போலீசார் கைது செய்தனர். வளத்தியைச் சேர்ந்தவர் அய்யாகண்ணு மகன்கள் வேலு. 46; குமார், 40; ரவி, 35; விவசாயிகள். இவர்களுக்கு அருகருகே வீடுகள் உள்ளன. இவர்களின் தந்தைக்கு சொந்தமான 6 சென்ட் வீட்டு மனை பாகம் பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், வேலு மகள் காவ்யா, 16; குமார் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். காவ்யாவை, பாட்டி கமலாம்மாள் திட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்டதில் வேலு மனைவி காமாட்சி காயமடைந்தார். இது குறித்து காமாட்சி, 40; அளித்த புகாரின் பேரில் குமார், ரவி , கோகிலா, தேவி, கமலா ஆகிய 5 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ