மேலும் செய்திகள்
பெண் பலாத்கார முயற்சி வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
27-Nov-2024
விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த தாழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சிவரஞ்சனி, 26; இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். மணிகண்டன், கடந்த 2013ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார்.2016ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி சிவரஞ்சனி தனது கணவரின் சகோதரி உமா வீட்டில் இருந்த மகளை அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்றார்.அப்போது, உமாவின் கணவர் செல்வம், 46; சிவரஞ்சனியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த சிவரஞ்சனி, தனது வீட்டிற்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், தற்கொலைக்கு துண்டியதாக செல்வம், உமா மீது அவலுார்பேட்டை போலீசார், வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.அதில், செல்வத்திற்கு, 10 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், உமாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார்.
27-Nov-2024