மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
23-May-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், அழகப்பா பல்கலை., சமூகப்பணி மாணவர்கள் குழு சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்கவி, அழகப்பா பல்கலை., சமூக பணி துறை தலைவர் வேல்சாமி, சமூக நல பிரிவு அலுவலர்கள் நெப்போலியன், தர்மேந்திரன், அறிவழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, புதிய சட்டங்கள் குறித்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.ஊராட்சி உறுப்பினர் சுதா, மகளிர் குழு தலைவர் நாகலட்சுமி, தூய்மை பணியாளர்கள் வசந்தி, கம்சலா மற்றும் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
23-May-2025