மேலும் செய்திகள்
காஞ்சியில் கபடி போட்டி
22-Oct-2024
விக்கிரவாண்டி: மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டியில் சூர்யா கல்லுாரி முதலிடம் பிடித்தது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி சூர்யா கல்லுாரி விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியை கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். போட்டியில் 8 கல்லுாரிகள் பங்கேற்றன. இதில் சூர்யா பொறியியல் கல்லுாரி மாணவிகள் முதலிடத்தையும், மயிலம் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இரண்டாவது இடத்தையும், விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், சேலம் இதயா பொறியியல் கல்லுாரி நான்காவது இடத்தையும் வென்றனர் .முதலிடம் பெற்ற சூர்யா பொறியியல் கல்லுாரி மாணவிகளை கல்லுாரி முதல்வர்கள் சங்கர், அன்பழகன், வெங்கடேஷ், பாலாஜி, மதன் கண்ணன், துணை முதல்வர் ஜெகன், உடற்பயிற்சி இயக்குனர்கள் சீனிவாசன், அருண்குமார், ராம்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.
22-Oct-2024