உள்ளூர் செய்திகள்

மகளிர் தின விழா

செஞ்சி: செஞ்சியில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் விழுப்புரம் மண்டல மாநாடு நடந்தது.வழக்கறிஞர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ராஜூ வரவேற்றார். வழக்கறிஞர்கள் சுப்ரமணியம், ஆறுமுகம், பெரியசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, உலக சாதனையாளர் சவுந்தர்ராஜன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் சிறப்புரையாற்றினர்.பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சக்திவேல், ராஜசேகர், மணி கண்டன், பிரசன்னா வெங்கடாஜலபதி கலந்து கொண்டனர். வழக்கறிஞர் சத்தியசீலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை