மேலும் செய்திகள்
பழமொழி : மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
25-Oct-2024
விழுப்புரம்: திண்டிவனத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் வாலிபர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திண்டிவனம் அடுத்த சிங்கனுார் புதுகாலனியைச் சேர்ந்தவர் பழனி மகன் ராஜசேகர், 33; இவர், கடந்த மே 2ம் தேதி 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில், கடந்த செப்டம்பர் 2ம் தேதி கைது செய்யப்பட்டார்.இவரை, தடுப்புக் காவலில் கைது செய்ய, விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பழனி கைது செய்ய உத்தரவிட்டார்.இதனையடுத்து, திண்டிவனம் மகளிர் காவல் நிலைய போலீசார், ராஜசேகரை பாலியல் வன்புணர்ச்சி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று தடுப்புக் காவலில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
25-Oct-2024