உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

திருவெண்ணெய் நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி கூலித் தொழிலாளி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 6:30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்தார்.அப்போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ