உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அழுகிய நிலையில் தொழிலாளி உடல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகில் உள்ள தாண்டவமூர்த்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ், 36; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு குட்லாயி என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு குட்லாயி தனது குழந்தைகளுடன் வீடூர் அடுத்த சிறுவை கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து போதை மயக்கத்தில் சாப்பிடாமல் துாங்கியுள்ளார். சிவராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது சிவராஜ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை